கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட இலங்கையர்..

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இலங்கையில் அனைவராலும் பேசப்பட்ட யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகராதிபதியான அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பீல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் நிஷான் துரையப்பா இலங்கையில் பிறந்தவர் என்ற வகையில் தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் பெரும் மரியாதையை வழங்கியவர்.

அவர் தனது தனிப்பட்ட விஜயத்திற்காக இலங்கை வந்திருந்த போது, வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய முக்கிய அரசியல்வாதிகளை சந்தித்து, காவல்துறை தலைமையகத்தில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் காவல்துறை சேவை மற்றும் அதில் இருந்து இலங்கைக்கு கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது பெரும்பாலான நாட்கள் அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!