ஜிம்பாப்வேவை 82 ரன்னில் சுருட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வென்றது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி கொழும்பில் நடந்தது.

முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வேஅணி இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

பிரையன் பென்னட் மட்டும் அதிரடி காட்ட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஜிம்பாப்வே 14.1 ஓவரில் 82 ரன்களுக்கு சுருண்டது.

 

அந்த அணியின் பிரையன் பென்னட் 12 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், தீக்ஷனா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 10.5 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பதும் நிசங்கா 39 (23) ரன்களும், குசால் மெண்டிஸ் 33 (27) ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வென்றது.

ஆட்டநாயகன் விருதை வனிந்து ஹசரங்காவும், தொடர் நாயகன் விருதை ஏஞ்சலோ மேத்யூசும் பெற்றனர்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!