ஜிம்பாப்பேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

கொழும்பில் ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் ஆடிய ஜிம்பாப்பே 22.5 ஓவர்களுக்கு 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக Gumbie 29 (34) ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் ஹசரங்கா (Hasaranga) 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது 5வது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் குசால் மெண்டிஸ் 51 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதை வனிந்து ஹசரங்காவும், தொடர் நாயகன் விருதை ஜனித் லியானகேவும் பெற்றனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!