ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்ற இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று நடந்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 308 ரன்கள் குவித்தது.

அசலங்கா ஆட்டமிழக்காமல் 97 ரன்களும், குசால் மெண்டிஸ் 61 ரன்களும், சமரவிக்ரமா 52 ரன்களும் விளாசினர்.

ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகளும், நூர் அகமது, கியாஸ் அகமது மற்றும் பரூக்கி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜட்ரான் 54 ரன்களும், ரஹ்மத் ஷா 63 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 140 ரன்களை கடந்தது.

ஆனால், ஹசரங்கா தனது மாயாஜால சுழற்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணியை மொத்தமாக சரித்தார்.

இதனால் ஆப்கான் அணி 33.5 ஓவரில் 153 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 155 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஹசரங்கா 4 விக்கெட்டுகளும்இ அசிதா பெர்னாண்டோ மற்றும் தில்ஷன் மதுஷன்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டியை வென்றிருந்த இலங்கை, தற்போது ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!