கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை!

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்பே அணி முதலில் ஆடியது

தொடக்க வீரர் Kamunuhukamwe அதிரடியாக 26 (18) ரன்கள் விளாசினார். அடுத்து கிரேக் எர்வின் 10 ரன்னிலும், சியான் வில்லியம்சன் 14 ரன்னிலும், பர்ல் 5 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆனால் கேப்டன் சிக்கந்தர் ரஸா ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம் ஜிம்பாப்பே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வனிந்து ஹஸரங்கா மற்றும் தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்கத்திலே விக்கெட்டுகள் சரிந்தன.

ஜிம்பாப்பேயின் கேப்டன் ரஸாவின் சுழலில் இலங்கையின் அதிரடி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அணியின் வெற்றிக்கு 6 ரன்களே இருந்த நிலையில் மேத்யூஸின் விக்கெட்டை, வேகப்பந்து வீச்சாளர் முஸரபாணி வீழ்த்தி இலங்கைக்கு செக் வைத்தார்.

46 (38) ரன்கள் எடுத்திருந்த மேத்யூஸ் அவரது பந்துவீச்சில் மசகட்சாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 2 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. சமீரா பவுண்டரி விளாச, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என மாறியது.

ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொள்ள, கடைசி பந்தை சந்தித்த சமீரா னநநி மிட்-விக்கெட் திசையில் ஷாட் அடித்து 2 ரன்களை எடுத்தார். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்பே அணியின் தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) 3 விக்கெட்டுகளையும், முஸரபாணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!