கடைசி போட்டியிலும் வென்று ஆப்கானை white wash செய்த இலங்கை

இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் குவித்தது. ரஹ்மத் ஷா 65 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 54 ரன்களும் விளாசினர்.

இலங்கை தரப்பில் மதுஷன் 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி இலக்கினை எட்டி வெற்றி பெற்றது. ருத்ர தாண்டவம் ஆடிய அவிஷ்கா பெர்னாண்டோ 66 பந்தில் 91 ரன்கள் எடுத்தார்.

பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா 101 பந்தில் 118 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை அதிவேகமாக கடந்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் நிசங்கா படைத்தார்.

ஏற்கனவே தொடரை வென்ற இலங்கை, இந்த வெற்றியின் மூலம் 3-0 என ஆப்கானை ஒயிட் வாஷ் செய்தது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!