டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தின் அத்திவாரமாக இருளில் மூழ்கிய இலங்கை…..

ஒரு நாடு பொருளியல் பண்பாடு, அரசியல் போன்ற காரணங்களால் அபிவிருத்தியடைந்து வருகின்றது.  உலகில் பல நாடுகள் இன்று அபிவிருத்து அடைந்து முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற போது  பல நூற்றாண்டுகளாக இன்று வரை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலின் பட்டியலில் மிகவும் பின் தங்கிய நாடாக இலங்கை உள்ளது.
இவ்வாறான நிலையில் உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “தேசிய தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் விழாவில்’’ வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கு தயாராகும் இதேவேளை முழு நாடும் முற்றாக இருளில் மூழ்கிய சில மணித்தியாலயங்களில் அவதியுள்ள மக்களின் புலம்பல்கள் ஏறாலம்.
நாடளாவிய ரீதியில் நேற்று முன் தினம் (09.12.2023)  திடீர் மின்தடை ஏற்பட்டது.
திடீர் மின் தடை ஏற்பட்டமையால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த திடீர் மின் தடைக்கு  காரணம் என பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விக்கு ஊதாசினமாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இந்த பிரச்சினை நேற்று முன் தினம் மட்டுமல்ல கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இதுபோன்ற மின்தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி அன்று கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
மேலும்இ 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி அன்று கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன் அவ்வாறான மின் தடைகள் மீண்டும் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் நேற்று திடீரென சுமார் 06 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டதுடன்இ மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் நாட்டை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
இருப்பினும் வைத்தியசாலைகளில் இந்த திடீர் மிந்தடையை எவ்வாறு சமாலித்துள்ளனர்?
அண்மை காலமாக சுகாதார துறை தீர்க்க முடியாத ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில் திடீர் மின் தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகளில் பல இன்னல்களுக்கு வைத்தியர்களாக இருந்தாலும் சரி நோயாளிகளாக இருந்தாலும் சரி முகங்கொடுத்துள்ளனர்.
மனித வாழ்க்கைக்கு உத்தரவில்லாத இந்த நாட்டில் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கு கடன்சுமையுடன் தயாராக எத்தணிக்கின்றார் ரணில்.
அரசாங்கத்திற்கு நேற்று முந்தினம் பதிவாகிய திடீர் மின் வெட்டு வெறும் மின் வெட்டு மாத்திரமே ஏனெனில் அரசாங்க சொத்துக்கள் நேற்று முன் தினம் பிரகாசித்ததை நாம் கண்டோம்.
உதாரணமாக ஆசிய அதிசயங்களில் ஒன்றான கொழும்பு தாமரை கோபுரத்தை கூறலாம்.
ஆனால் அப்படியே மறுபுறம் பார்த்தால் போக்குவரத்தில் ஏற்பட்ட பிரச்சினைஇ நீர் தடைஇ வர்த்தக வியாபாரங்களில் ஏற்பட்ட சிரமம் என சொல்லிக்கொண்டே செல்லலாம்.
இந்த திடீர் மின் தடைஇ எதிர்காலத்தில் பதிவாகாமல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக நாடாளுமன்றில் இதை வைத்து நேற்றைய தினம் அரசியல் காய் நகர்த்தல்கள் செய்யப்பட்டது.
இவையா டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கான அத்திவாரம்?
இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் ஆதரிப்பார்களா அல்லது சிறந்த இன்னொறு புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க மக்கள் வாக்கெடுப்பு எனும் ஆயுதத்தை கையிள் எடுப்பார்களா எனும் கேள்விக்கு 2024 ஆம் ஆண்டில் பதில் கிடைக்கப்பெறும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!