சுற்றுலா செல்லக்கூடிய 13 நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

எம் அனைவருக்கு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த விடயமாகும்.

இதன் படி நாட்டுக்கு நாடு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த ஒரு விடயமாகும்

இந்நிலையில் உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய 13 இடங்களை பொக்ஸ் நியுஸ் (Fox News) பெயரிடப்பட்டுள்ளது.

பொக்ஸ் நியுஸ் பெயரிட்டுள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையில், யானைகள் போன்ற பூர்வீக வனவிலங்குகளை அருகில் சென்று பார்வையிடமுடியும். அதுமாத்திரமன்றி, கடற்கரைக்கு சென்று சூரிய ஒளியில் நேரத்தை கழிக்க முடியும்.

“நீங்கள் இலங்கையில் தங்குமிடங்களுக்கு சுமார் 20 முதல் 40 டொலர் வரை செலவழிக்க எவ்வளவும் எதிர்பார்க்கலாம், சராசரியாாக உணவுக்கு சுமார் 5 டொலர்கள் மாத்திரமே செலவாகும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒரு குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடமாக பெயரிடப்பட்டுள்ளது

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!