இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு! உலகக்கோப்பை தொடர் தோல்விகளால் அதிரடி உத்தரவு

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டது.
அத்துடன் இந்திய அணிக்கு எதிராக 55 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்களை இலங்கை அணி எதிர்கொண்டது.
இந்த நிலையில் தான் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கிரிக்கெட் வாரியத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளார்.
தற்காலிக தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஊழல், சூதாட்டம், வீரர்களின் ஒழுங்கீனம் என குறிப்பிட்டு ஐசிசிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!