தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (06) முதல் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன வலியுறுத்தியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!