நியூசிலாந்துக்கு முதல் இன்னிங்சிலேயே பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் நடந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

நிதானமாக ஆடிய ருவன் டி ஸ்வார்ட் 64 ரன்களும், பெடிங்கம் 39 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரௌர்கே 4 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் .

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், அனுபவ வீரர் டெவன் கான்வே தான் சந்தித்த 3வது பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் பார்ட்னர்ஷிப் 74 ரன்கள் குவித்தது. எனினும் டாம் லாதம் 40 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் பியேட் மற்றும் பாட்டர்சனின் துல்லியமான பந்துவீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வில் யங் 36 ரன்களும், நீல் வாக்னர் 33 ரன்களும் எடுத்தனர். டேன் பியேட் 5 விக்கெட்டுகளும், டேன் பாட்டர்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 31 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!