216 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி..

மகளிர் தென் ஆப்பிரிக்க அணி 216 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி Willowmoore Park மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீராங்கனைகள் வொல்வார்ட் (Wolvaardt), டஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) இருவரும் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

இவர்களது பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. சதம் விளாசிய கேப்டன் வொல்வார்ட் 126 (134) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரிட்ஸ் 118 (124) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அன்னேகே போஸ்ச் 28 ரன்களும், சுனே லூஸ் 34 ரன்களும் அதிரடியாக எடுக்க தென் ஆப்பிரிக்கா 316 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 100 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 216 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் நாடினே டி க்ளெர்க், காகா தலா 3 விக்கெட்டுகளும், மரிசன்னே கப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Player of the match விருதை 118 ரன்கள் விளாசிய டஸ்மின் பிரிட்ஸ் வென்றார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!