ஸ்மிரிதி மந்தனா 74 ரன்கள் விளாசியும் RCB தோல்வி

WPL தொடர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

மகளிர் பிரீமியர் லீக்கின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

ஷஃபாலி வெர்மா 31 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், கேப்சி 33 பந்துகளில் 46 ரன்களும் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா வாணவேடிக்கை காட்டினார்.

ஆனால் சோபி டிவைன் 23 ரன்களிலும், மேகனா 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் அடித்த மந்தனா 43 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. டெல்லி அணியின் ஜெஸ் ஜான்சன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!