80 ரன் விளாசிய ஸ்மிருதி மந்தனா! RCB அபார வெற்றி

உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

WPL தொடரின் நேற்றைய ஆட்டத்தில் RCB  மற்றும் UP Warriorz அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய RCB  அணியில் மேகனா 28 ரன்களில் அவுட் ஆக, எல்லிஸ் பெர்ரி மற்றும் ஸ்மிருதி மந்தனா கூட்டணி சிக்ஸர் மழை பொழிந்தது.

குறிப்பாக, எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்ஸர் பரிசாக வழங்க வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்தது.

அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய எல்லிஸ் பெர்ரி 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து வெளியேறினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் வந்த ரிச்சா கோஷ் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க RCB  198 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் ஆடிய உபி அணியில் கேப்டன் அலைசா ஹீலியை தவிர ஏனைய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் அந்த அணி தடுமாறியபோது தீப்தி ஷர்மா கைகொடுத்தார்.

அலைசா ஹீலி 38 பந்துகளில் 55 ரன்களில் வெளியேற, அந்த அணி சரிவை சந்தித்தது.

பூனம் கேம்னர் கடைசி வரை போராட, தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முழுவதாக ஆடிய உபி அணி 175 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

பூனம் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். RCB  அணியில் சோபி டிவைன், சோபி மோலிநீக்ஸ், ஜார்ஜியா மற்றும் ஆஷா சோபனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!