Display இல்லாத ஸ்மார்ட்போன்! AI Pin-யின் மிரள வைக்கும் அம்சங்கள்

Humane நிறுவனத்தின் புதிய AI Pin எனும் Gadget Display இல்லாத ஸ்மார்ட்போன் என்று அழைக்கபடுகிறது.
தற்போது இந்த Gadget அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
செவ்வக வடிவில் சட்டையில் பொருத்திக் கொள்ளக்கூடிய வகையில் இந்த Gadget வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பிற ஸ்மார்ட்போன்களை விட முற்றிலும் மாறுபட்டது.
இதனை வைத்து மெசேஜ் அனுப்புவது, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது, புகைப்படம் எடுப்பது என அனைத்து ஸ்மார்ட்போன் அம்சங்களையும் Access செய்யலாம்.
விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஆகவும் இது இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை சட்டையில் பொருத்திக் கொண்டு நமது கையில் Projection முறையில் படும் ஒளியை வைத்து இதனை உபயோகிக்கலாம்.
Cosmos எனும் இயங்குதளத்தில் இந்த AI PIN இயங்கக்கூடியது. இதில் Chat GPT மற்றும் பிங்க் போன்றவற்றின் Support உம் உள்ளது.
இந்த சாதனத்தை Voice comment மற்றும் சைகை மூலம் பயன்படுத்தலாம். அதேபோல் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மூலம் இதில் மெசேஜ்களை கம்போஸ் செய்யலாம்.
மேலும் இதில் உள்ள காமெரா உணவுகளை scan செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்த தகவல்களை கொடுக்கும்.
இந்திய மதிப்பில் ரூ.58,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த AI Pin தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
எனினும் விரைவில் உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Images: Humane

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!