மோடி குறித்து அவதூறு..மாலத்தீவு அமைச்சர்கள் அதிரடி நீக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அமைச்சர்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

அத்துடன் அவர் தனது பதிவில், ‘லட்சத்தீவு என்பது தீவுகளின் கூட்டம் மட்டுமல்ல. அது, பாரம்பரிய மரபுகள் மற்றும் மக்களின் இயல்பான பண்பின் உண்மை தன்மையை வெளிக்காட்டுவதும் ஆகும்.

சாகசங்களை விரும்பும் நபர் என்றால், உங்களுடைய பட்டியலில் லட்சத்தீவும் இடம் பெறலாம்’ என குறிப்பிட்டார்.

அவரது இந்த பதிவினைத் தொடர்ந்து, இந்தியர்கள் பலரும் ஒன்லைனில் லட்சத்தீவு குறித்து தேட ஆரம்பித்ததால், லட்சத்தீவு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

ஆனால், மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியூனா இந்த பதிவினை கேலி செய்தார்.

அவர், “உயிர்காக்கும் உடை அணிந்திருக்கும் மோடி இஸ்ரேலின் கைப்பாவை” என கருத்து கூறினார்.

அவரைப்போல மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகிய அமைச்சர்களும் அவதூறு கருத்து பதிவிட்டனர்.

அதன் பின்னர் சில மாலத்தீவு நெட்டிசன்களும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டனர்.

இதன் காரணமாக, இந்திய பிரபலங்கள் மற்றும் influencers பலர் மாலத்தீவை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் ஒன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாலத்தீவு அரசானது மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!