சிராஜின் புயல் தாக்குதலில் 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

முகமது சிராஜின் புயல்வேகப் பந்துவீச்சில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஸ்டப்சை 3 ரன்னில் பும்ரா வெளியேற்றினார்.

அதன் பின்னர் வந்த வீரர்களும் சிராஜின் பந்துவீச்சில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு சுருண்டது. பெடிங்கம் (12), வெரின்னே (15) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய சிராஜ் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!