உடலில் தங்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் எளிய வழிகள்…

பொதுவாக உடலிலுள்ள கொழுப்பினை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று நல்ல கொழுப்பு (HDL), மற்றொன்று கெட்ட கொழுப்பு (LDL).
நல்ல கொழுப்பு இதயத்தை பலமாக்குகிறது. கெட்ட கொழுப்பு இதயத்தை பலவீனமாக்குகிறது.
உடலில் கொழுப்பை சேரவிடாமல் பாதுகாத்துக் கொள்வது உடல் நலத்திற்கு அவசியம் ஆகிறது.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவை அடங்கிய நார்ச்சத்து மிக்க உணவுகள் மற்றும் நட்ஸ், ஆலிவ் எண்ணெய், அவகாடோ ஆகியவற்றை உண்பதால் இதயத்திற்கு தேவையான நல்ல கொழுப்பை வழங்கிட முடியும்.
அதேவேளையில் மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பை உடலில் இருந்து நீக்குவதன் மூலம் நம் ஆரோக்கியம் பேணிப் பாதுகாக்கப்படும்.
அதிகப்படியான கெட்ட கொழுப்பை குறைக்க இஞ்சிச்சாறு போன்ற பானங்கள் உதவி செய்கிறது.
ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு சிட்டிகை இஞ்சிச்சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கெட்ட கொழுப்புகள் கரையும்.
மேலும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தூள் கலந்த பால், ஆம்லா சாறு, தேன் மற்றும் பூண்டு விழுது கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்திட முடியும்.
சரிவிகித உணவையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்வது, உடல் நலத்தில் எந்த வித பிரச்சினைகளும் வராமல் இருக்க உதவி செய்கிறது.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!

1 comment

தொப்பை குறைய காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்! - Namthesam Tamil News November 28, 2023 - 10:05 pm
[…] வயிற்றில் நாம் குடிக்கும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் பால் […]
Add Comment