திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் சூரசம்காரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் இன்று சூரசம்கார விழா தொடங்கியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் திகதி அதிகாலை தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இதனை காண கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
அரசு சார்பாக, சூரசம்காரம் நடைபெறவுள்ள கடற்கரையில் தடுப்புகள் அமைத்து சுமார் 3000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 12 கண்காணிப்பு கோபுரங்களும், 100 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
கடற்கரையின் பல இடங்களில் எல்இடி திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் திருச்செந்தூர் செல்ல 300 சிறப்பு பேருந்துகள் மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்படுகின்றது.

Related posts

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது!

திருக்கேதீஸ்வர ஆலய மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!