“ஓட்டு போடாதீங்க, வீட்டில் படுத்து தூங்குங்க” சீமான் சர்ச்சை பேச்சு!

ஏப்ரல் 19 ஆம் தேதி வீட்டில் கூட தூங்குங்கள், ஆனால் பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய அரசு இயந்திரங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓட்டு போட வரவேண்டாம் என சீமான் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண், 20 ஆண் வேட்பாளர்களை தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் சீமான் நிறுத்தியுள்ளார். அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சீமான், திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது:

ராமர் என்ற ஒருவர் இருந்தால் பாஜக ஒரு இடத்தில் கூட நிச்சயம் ஜெயிக்காது. சிங்கம் என பெயரிட்டு அழைத்தாலே சிங்கத்திற்கு தெரியாது. இதில் அக்பர் என பெயர் வைத்துவிட்டதால் இந்து அமைப்பினர் வழக்கு போட்டனர்.

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நீங்கள் ஓட்டு போடாமல் வீட்டில் படுத்து தூங்குங்கள். ஆனால் பாஜகவுக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க என சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!