இந்திய ராணுவமே இருக்காது! முகமது முய்சு!

இந்தியா மாற்றும் மாலத்தீவு இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கிருந்து இரண்டாவது இந்தியப் படைகள் தாயகம் திரும்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக நல்லுறவு இல்லை. மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்கும் நிலையில், அவர்கள் வெளியேறியே தீர வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தச் சூழலில் தான் மாலத்தீவில் இருந்து இரண்டாவது இந்திய ராணுவ டீம் இப்போது அங்கிருந்து வெளியேறி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் முதல் குழு மாலத்தீவில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போது இரண்டாவது குழுவும் வெளியேறி உள்ளனர்.

ஏப்ரல் 9ஆம் தேதி இரண்டாவது குழு வெளியேறியதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். இந்த மாத இறுதியில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் இதைப் பெரிய விஷயமாக எடுத்துச் செல்ல முய்சு திட்டமிட்டுள்ளார்.

ஏனென்றால் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் கூட அவர் இதைத் தான் முன்வைத்தார். அதிபரானால் இந்தியப் படைகளை வெளியேற்றுவேன் என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த விஷயத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

மாலத்தீவில் மருத்துவ காரணங்களுக்கு உதவியாக இருக்கும் ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்யவே இந்திய வீரர்கள் அங்கே இருக்கிறார்கள். இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அங்குள்ள இந்திய வீரர்கள் வெளியேறுவார்கள்.

அதற்குப் பதிலாக ராணுவம் அல்லாத இந்தியா தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கே செல்வார்கள் என்பதே ஒப்பந்தம். ராணுவம் வெளியேறிவிட்டதாக முய்சு கூறினாலும் வேறு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனரா என்பது குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!