சீமானுக்கு வந்த மிகப் பெரிய சிக்கல்! சின்னம் மாறுகிறது?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகளில் சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் பெற்று தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

 

இதனால், இந்த முறை மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெறும். ஆனால், யார் வாக்குகளை பிரிக்கப்போகிறது என்பதுதான் பெரும் விவாதமாக உள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், Bharatiya Praja Aikyata Partyக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாதகவினர் இதுவரை விவசாயி சின்னத்தில்தான் போட்டியிடுட்டு வந்தனர். ஆனால், தற்போது தீடீரென்று ஒரு புதிய கட்சிக்கு இந்த சின்னத்தை கொடுத்திருப்பதால், நாதகவின் ஓட்டை பிரிக்கும் செயல் என வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த கட்சி தமிழ்நாட்டிலும் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!