ஆப்பிள் போன்களில் வரவிருக்கும் மிரட்டலான புதிய அம்சம்!

ஆப்பிள் தனது போன்களில் Under Display கேமராவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் தனித்த அந்தஸ்த்தை பெறும்.
அதன் தனிச்சிறப்புகள், அதற்கான விலை என தனக்கென தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அந்நிறுவனமானது தனது பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கும் முயற்சியாக, தன் மொபைல் போன்களில் Under Display கேமரா எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. அன்டர் பேனல் கேமராவை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த அம்சத்தில் கேமராவானது திரையின் கீழே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இதனால், வீடியோக்களை திரையில் எவ்வித இடையூறும் இல்லாமல் முழுதாக பார்க்க முடியும்.
மேலும் Gaming பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வரும் 2026ஆம் ஆண்டிற்குள் இந்த அம்சம் ஆப்பிளின் போன்களில் கிடைப்பது சந்தேகத்திற்குரியதாகும்.
இருப்பினும் அதற்கு முன்பாக ஃபேஸ் ஐடி அம்சத்திறக்காக Under Display சென்சாரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!