போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்!

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லைசுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோடிலிங்கம் 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. கோவையில் இருந்து திருச்சி வரும் பொழுது தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அதற்கான உண்மை தன்மை அறியும் வரை போலீஸ் காவலில் வழங்கக் கூடாது எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று சவுக்கு சங்கர் எங்களிடம் தெரிவித்ததின் பேரில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம்.

தொடர்ந்து நீதிபதி அவர்கள் இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்து ஒரு நாள் போலீஸ்காவலில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மேலும்இ 24 மணி நேரத்திற்குள் வழக்கறிஞர்கள் 3 முறை அவரை சென்று பார்வையிடலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவரை கோவையில் இருந்து அழைத்து வரும் பொழுது தாக்கப்பட்டதாக குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை, அது கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!