சாந்தன் மரணம்! யாழில் கடும் வேதனையில் தாய்

தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின், அந்த ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதன்பின், தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகள் மூலம், கடந்த 2022ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து சாந்தன் ஈழத்தமிழர் என்பதால் அவர் திருச்சியில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கிருந்து இலங்கை வருவதற்கு தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 24ம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், உடனடியாக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கோமா நிலைக்கு சென்ற அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன் மகன் வருவான் என யாழ்பாணத்தில் அவரது தாய் 32 வருடங்களாக காத்திருக்கிறார். ஆனால், இறுதிவரை மகன் இலங்கைக்கு வராமல் உயிரிழந்தது அவருக்கு கடும் வேதனையை கொடுத்துள்ளது.

Related posts

திமுக நிர்வாகி மீது வெடிகுண்டு வீச்சு…பலி! சற்று முன் பயங்கரம்

இலங்கை வரும் சாந்தன் உடல்!கலங்கிய நளினி

சீரற்ற காலநிலை – கிளி.யில் 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6064 பேர் பாதிப்பு!!