சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் சஹாரா காலமானார்

75 வயதான சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் சஹாரா நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
சஹாரா குழுமம் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் ஆகும். இந்த நிறுவனம் தான் இந்திய அணியின் நீண்டகால ஸ்பான்சராக விளங்கியது.
1948ஆம்ஆண்டு பீகாரில் பிறந்த இவர், 1978ஆம் ஆண்டு வெறும் 2,000 ரூபாய் மூலதனத்தில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கினார்.
சொற்ப முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல உயரங்களை அடைந்தது.
1990ல் லக்னோவிற்கு சென்று அந்நகரை தன் குழுவின் தலைநகராக மாற்றினார்.
இந்நிலையில், சஹாரா சிட்பண்ட் மோசடி எனும் வழக்கில் சிக்கிய சுப்ரதா கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். நிறுவனமும் அதன் பின்னர் வீழ்ச்சியை சந்தித்தது.
அதே வேளையில் சுப்ரதா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மெட்டாஸ்டேடிக் வீக்கம் ஆகியவற்றால் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!