தமிழ் திரையுலகின் ஜாம்பவான் திரு.விஜயகாந்தின் மறைவு வருத்தம் அளிக்கிறது: இந்திய பிரதமர் நரேந்திர மோடி..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவினால் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டது.

தற்போது விஜயகாந்தின் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்தை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில். ‘திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.

ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்.

இந்த சோகமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’ என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!