யாழில் தொடரும் பலி! – இளைஞனை காவு கொண்டது டெங்கு..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (23 வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இளைஞன் மூளை சாவடைந்திருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் , நேற்றைய தினம் மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் 71 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் காரணமாக புதிதாக இரண்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ் பல்கலை மாணவிக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமையால் மாணவி உயிரிழந்தார். அத்துடன் கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!