ருத்ர தாண்டவமாடி முதல் சதம் விளாசிய குர்பாஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஷார்ஜாவில் நடந்தது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிய ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) 52 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார்.

இதில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். மேலும் இது அவரது முதல் டி20 சதம் ஆகும்.

அதேபோல் ஆப்கான் கேப்டன் இப்ராஹிம் ஜட்ரான் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி 137 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

விரித்தியா அரவிந்த் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இது அவரது 6வது அரைசதம் ஆகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி 31ஆம் திகதி நடைபெற உள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!