இன்டர் மியாமி – அல் நஸர் போட்டியில் ரொனால்டோ விலகல்

இன்டர் மியாமி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அல் நஸர் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில் இன்று நட்புமுறை போட்டி நடைபெற உள்ளது.

இதில் இன்டர் மியாமி மற்றும் அல் நஸர் அணிகள் மோதுகின்றன. மெஸ்ஸியும், ரொனால்டோவும் இப்போட்டியில் மோதுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால் இதற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் ரொனால்டோ விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது ரொனால்டோவின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சீனாவில் நடந்த சவுதி புரோ லீக் போட்டிகளில் ரொனால்டோ காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

தற்போது இன்டர் மியாமி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட சரியான நேரத்தில் அவர் குணமாகவில்லை என அல் நஸர் அணி உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!