யூரோ கோப்பை தகுதிச் சுற்றில் மிரள வைத்த ரொனால்டோ!

யூரோ கோப்பை தகுதிச் சுற்றில் போர்த்துக்கல் (Portugal) அணி 2-0 என்ற கோல் கணக்கில் லீச்டென்ஸ்டீன் (Liechtenstein) அணியை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கான யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு நடந்த போட்டியில் போர்த்துக்கல் மற்றும் லீச்டென்ஸ்டீன் அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிரட்டலாக கோல் அடித்தார்.
அவர் தன்னிடம் வந்த பந்தை மின்னல் வேகத்தில் கடத்திச் சென்று கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து போர்த்துக்கலின் கேன்செலோ (Cancelo) துரித கதியில் செயல்பட்டு அபாரமாக கோல் அடித்தார்.
லீச்டென்ஸ்டீன் அணியினால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு போர்த்துக்கல் அணியின் பாதுகாப்பு அரண் இருந்தது.
இறுதியில் போர்த்துக்கல் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதில் கோல் அடித்ததன் மூலம் ரொனால்டோவின் சர்வதேச கோல் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.
தற்போது வரை சர்வதேச அளவில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் அவர் முதலிடம் வகிக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில், விளையாடி வரும் வீரகளில் அர்ஜென்டினா நட்சத்திரம் மெஸ்ஸி 106 கோல்களுடன் உள்ளார்.
போர்த்துக்கல் அணி தகுதிச் சுற்றில் தோல்வியே காணாமல் 9 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!