கங்குலியின் இமாலய சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியின் சாதனையை தகர்த்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 326 ரன்கள் குவித்துள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 110 ரன்களும் எடுத்தனர்.

11வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்த ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதன்மூலம் அவர் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்தார். கங்குலி 18,575 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோகித் தற்போது 18,600 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (34,357), விராட் கோலி (26,700), ராகுல் திராவிட் (24,208) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

மேலும், இந்திய அணிக்காக உலகக்கோப்பை டெஸ்டில் அதிக சதங்கள் (8) அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 80 சிக்ஸர்கள் விளாசி, அதிக சிக்ஸர் அடித்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் அதிக வயதில் (36) சதம் அடித்த இந்திய கேப்டன் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா செய்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!