43 வயதில் புதிய வரலாறு படைத்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டி நடந்தது.

இதில் இரட்டையர் இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா – மேத்யூ எப்டென் (அவுஸ்திரேலியா) ஜோடி ஆடியது.

தங்களை எதிர்த்து ஆடிய இத்தாலியின் சிமோன் போலெலி மற்றும் ஆன்ரீயா வவாசோரி ஜோடியை 7-6 (7-0)இ 7-5 என்ற செட்களில் இந்திய,அவுஸ்திரேலிய ஜோடி வீழ்த்தியது.

இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை இந்த ஜோடி கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் ரோஹன் போப்பண்ணா அதிக வயதில் (43) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் எனும் வரலாற்று சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு 40 வயதில் நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் பிரெஞ்சு ஓபன் இரட்டையர் சுற்றில் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.

அதனை ரோஹன் போப்பண்ணா 43 வயதில் முறியடித்துள்ளார். மேலும், ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

இந்த அரிய சாதனையைப் படைத்த ரோஹன் போப்பண்ணாவுக்கு டென்னிஸ் உலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!