அர்னால்டு, சில்வெஸ்டர் ஸ்டாலோனுடன் நடித்த பிரபலம் காலமானார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபல நடிகர் கார்ல் வெதர்ஸ் தனது 76வது வயதில் காலமானார்.

1976ஆம் ஆண்டில் குத்துச்சண்டையை மையமாக வைத்து ஹாலிவுட்டில் வெளியான திரைப்படம் ராக்கி.

சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் கார்ல் வெதர்ஸ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Magnum Force படத்தின் மூலம் அறிமுகமானாலும் கார்ல் வெதர்ஸ் ‘ராக்கி’ பட சீரிஸின் 4 பாகங்களில் நடித்து புகழ்பெற்றார்.

அதேபோல் ”பிரிடேட்டர்” படத்தில் அர்னால்டு ஸ்வார்ஸினேகர் உடனும் கார்ல் வெதர்ஸ் இணைந்து நடித்திருந்தார்.

பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளியான Think Like a Man Too – ல் நடித்திருத்தார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் கார்ல் வெதர்ஸ் உயிரிழந்துள்ளார்.

76 வயதான அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக, அவரது மேலாளர் Matt Luber அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கார்ல் வெதர்ஸ் இறப்பு குறித்து Matt Luber வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கார்ல் ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு விதிவிலக்கான மனிதர். திரைப்படம், தொலைக்காட்சி, கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பின் மூலம், அவர் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.

அத்துடன் உலகம் முழுவதும் மற்றும் தலைமுறைகள் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டார். அவர் ஒரு அன்பான சகோதரர், தந்தை, தாத்தா, பார்ட்னர் மற்றும் நண்பர்” என தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் வெளியான Toy Story 4  அனிமேஷன் படத்தில்  பின்னணி குரல் கொடுத்திருந்த கார்ல் வெதர்ஸ், 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை The Mandalorian எனும் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!