ரிக்கெல்ட்டன், பிரேவிஸ் அதிரடியில் 248 ரன்கள் குவித்து MI கேப்டவுன் அபார வெற்றி

SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக MI கேப்டவுன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செஞ்சுரியனின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில், MI கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய MI அணி 248 ரன்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிக்கெல்ட்டன் (Rickelton) 45 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசினார்.

பிரேவிஸ் 32 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்தார். பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 7 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.

பிரிட்டோரியா அணியின் தரப்பில் கேப்டன் பர்னெல் 3 விக்கெட்டுகளும், டுபாவில்லோன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியா அணி 214 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடிய கைல் வெர்ரேன்னே 52 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.

MI கேப்டவுன் அணியின் தரப்பில் துஷாரா 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த போட்டியில் MI அணி தரப்பில் 20 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!