15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம்..

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

1.5 சதவீதமாக தற்போது குறைவடைந்துள்ள நாட்டின் பணவீக்கமானது அடுத்த வருடம் 5 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளில் வற் வரி தாக்கம் செலுத்துவதால் இந்த நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது குறித்த வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 69க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் அடுத்த வருடம் முதல் வற் வரி அறவிடப்படவுள்ளது.

அதில் எரிவாயு, எரிபொருள், மருத்துவ உபகரணங்கள், கைப்பேசிகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.

இதனால் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!