இன்று 12 ராசிகளுக்கான பலன்! யாருக்கு அதிர்ஷ்டமான நாள்

இன்று(பிப்ரவரி 27) 12 ராசிகளில் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்..

மேஷம்

பணியிடத்திலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள், தலையிட்டால் தேவையில்லாத பயங்கள் ஏற்படும். மொத்ததில் இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய நாள். பொது இடங்களில் மதிப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை இன்று நிறைவேற்றுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாள் சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமாக வரும்.

மிதுனம்

செல்வாக்கு பெரும் நாள். சகோதர,சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்கு வாய்ப்புகள்வரும். வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். கல்விதுறையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது.

சிம்மம்

தனிப்பட்ட விஷயங்களை யாருடனும் பகிராதீர்கள். உணவு எடுத்துக்கொள்வதில் இன்று கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் நாள்.

கன்னி

வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்இ ஆறுதலும் அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்

முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நிதி விஷயங்களில் அவசரம் வேண்டாம். பணியிடங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்

தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றம் இருக்கும். ஏதேனும் தொழில் விஷயங்களை தொடங்க சாத்தியமாகும். நிர்வாகம் எளிமையாக இருக்கும். இருப்பினும் சில விஷயங்களில் முடிவு எடுக்கும் போது மிக கவனம் தேவை.

தனுசு

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் பாராட்டுகளை பெறலாம். உறவினர்களிடம் மதிப்பும், மரியாதையும் உயரும். பயணங்கள் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள். முக்கியமான வாய்ப்புகள் தேடி வரும். கெட்டியாக அதை பிடித்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் ஆதரவு அதிகரிக்கும்.

கும்பம்

வேலை செய்யும் இடங்களில் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதால், கவனமாக இருப்பது நல்லது. சில சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் நலனில் அக்கறை தேவை. சில அசெளகரியங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மீனம்

நண்பர்களிடையே நட்பு அதிகரிக்கும். தொழில் விஷயங்கள் சுறுசுறுப்பாக இருங்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டும். ரகசியங்களை ரகசியமாக வைப்பதே சிறந்தது. அதை வெளியில் சொல்ல நினைத்தால், பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட்டில் இடம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024