புதிய முறையில் பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்து ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை!!

பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்தாலும் கூட அதன் தரத்தை குறித்து மூன்றாம் தரம் பிளாஸ்டிக்களை மறுசுழற்சி செய்ய முடியாது.

ஆனால், வேதியியல் முறையின் மூலம் எல்லா விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்ய முடியும் என செய்து காட்டியது ரிலையன்ஸ் நிறுவனம்.

நாட்டில் வெப்ப ஆற்றலை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வந்த நிலையில், முதல் முறையாக வேதி முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் திறமையை வெளிப்படுத்தியள்ளது.

இந்த மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் பைரோலிசிஸ் எண்ணெயில் இருந்து கிடைக்கும் பாலிமர் மூலம் வழக்கமான பிளாஸ்டிக் பொருட்களை விட உயர்தர பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்க முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பைரோலிசிஸ் எண்ணெய் உருவாக்கம் நடைபெறும் நிலையில், இதன் மூலம், சர்குரிப்போல்மற்றும் சர்குரெலின் என்ற இரண்டுவகை பாலிமர்களை உருவாக்கும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், உணவுப்பொருட்களை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை வழக்கத்தை விட அதிக அளவில் தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்இ இப்புதிய வேதிமுறை பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!