இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்!

இன்னும் சில காலத்திற்கு பின் இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசிய நந்தலால் வீர சிங்க, ” இன்று பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே தவிர, அதற்கு ஏற்ப மக்களின் வருமான அதிகரிக்கவில்லை. பணவீக்கம் 6% குறைந்தாலும், நாட்டின் பொருளாதாரம் 6%க்கு இன்னமும் வளர்ச்சியடையவில்லை.

இருப்பினும், மக்களின் வருமானம் பொருட்களின் விலைக்கு ஏற்ற வகையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு இன்னும் சில காலம் மட்டுமே எடுக்கும். மக்கள் சிறிது காலம் பொறுமையாக இருந்தால், அந்த நிம்மதி மக்களுக்கு கிடைக்கும்.

இதுபோன்ற பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சில நாடுகள் பல ஆண்டுகள் ஆகியும், அதில் இருந்து மீளவில்லை. ஆனால், நாம் அந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், குறுகிய காலத்திற்குள் அந்த பாதையில் பயணித்துள்ளோம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!