இலங்கை கிரிக்கெட் வாரிய பிரச்சினைக்கு ரணிலின் அதிரடி தீர்வு!

இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பிலான சிக்கலுக்கு, நீதிபதி குழுவின் அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க யோசனை கூறியுள்ளார்.
உலகக்கோப்பையில் இலங்கை அணியின் மோசமான தோல்விகளால் வாரியம் கலைக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால குழுவுக்கும் நீதிமன்றம் தடை விதிக்க, இலங்கை கிரிக்கெட்டில் குழப்பம் உண்டானது.
இந்த நிலையில் தான் சிக்கலுக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்கிரமசிங்க யோசனை கூறியுள்ளார்.
இடைக்கால குழுவை நியமிப்பது உறுதியான தீர்வாக இருந்தாலும், இந்த பிரச்சினைக்கு அது போதுமானதாக இருக்காது என கூறும் ரணில், தான் கிரிக்கெட்டின் பக்கம் நிற்பதாகவும், இந்த விடயத்தில் பாரபட்சமின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய யாப்பு வரைவின்படி,
இலங்கை கிரிக்கெட் குழுவானது 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படும்.
இந்த பணிப்பாளர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!