ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் : உதயங்க வீரதுங்க பகிரங்கம்

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று வருகை தந்துள்ளது.

இந்த விமானம் நேற்று (20) இரவு வந்துள்ள நிலையில் எஸ்டோனியாவின் டெலினில் இருந்து 117 பயணிகளுடன் SkyUP விமானம் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில் 6 நாடுகளில் இருந்து வாரத்திற்கு 5 விமானங்களில் 16,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் 25 மில்லியன் டொலர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தமக்கு அபிமானம் இல்லை எனவும், ஜனாதிபதி பதவிக்கு அவரும் பொதுஜன பெரமுனவும் ஆதரவளித்துள்ளதாகவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த உதயங்க வீரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை உறுதிப்பட அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!