ரணில் விக்ரமசிங்கவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச மகளிர் தினமான இன்று, இலங்கைப் பெண்களுக்கு தனது மகளிர் தின வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு திறன், மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண்/பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தேசிய மகளிர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான இரண்டு புதிய சட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு, சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.“ என அவர், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!