எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கைக்கு உறுதியளித்த ரணில்!

அதிபர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவி தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கைக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான முக்கிய கேள்வியை சுமந்திரன் எழுப்பியதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

குறித்த அறிக்கை இலங்கை தமிழரசு கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டதாக அதிபர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!