சசிகலாவை நேரில் சந்தித்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டிற்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்ட “ஜெயலலிதா இல்லம்” என்ற வீட்டில் குடியேறினார்.

மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே, சசிகலா புதிய பங்களா வீடு கட்டினார். இதன் புதுமனை விழா கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (பிப்.24) சசிகலா பங்களாவுக்கு குடியேறினார். இந்நிலையில், புதுமனை விழாவிற்கு செல்ல முடியாததால், ரஜினி இன்று அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். உடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளார்.

சுமார் 24,000 சதுர அடி கொண்ட இந்த வீடு, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விட சற்று பெரியது, பிரம்மாண்டமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!