253 ரன்கள் விளாசிய ரெய்னா அணி! கடைசி வரை போராடிய இலங்கை வீரர்

லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 75 ரன்கள் வித்தியாச்தில் மணிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது.
நேற்று நடந்த குவாலிஃபையர்1 போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Urbanrisers Hyderabad) மற்றும் மணிப்பால் டைகர்ஸ் (Manipal Tigers) அணிகள் மோதின.
டாஸ் வென்ற மணிப்பால் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய அர்பன்ரைசர்ஸ் அணியில் கப்தில் (Guptill) இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனார்.
அடுத்து வந்த கிளார்க் அதிரடியாக 19 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.
கேப்டன் ரெய்னாவை 2 ரன்களில் திசாரா பெரேரா (Thisara Perera) வெளியேற்றினார்.
மறுமுனையில் ட்வைன் ஸ்மித் (Dwayne Smith) சிக்ஸர் மழை பொழிந்தார். எதிரணி பந்துவீச்சை சுக்குநூறக்கிய அவர் சதம் விளாசினார்.
அவருடன் இணைந்து குர்கீரத் சிங் (Gurkeerat Singh) 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
ஸ்மித் 53 பந்துகளில் 7 சிக்ஸர், 14 பவுண்ரிகளுடன் 120 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் அர்பன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து கடினமான இலக்கினை நோக்கி மணிப்பால் டைகர்ஸ் அணி களமிறங்கியது.
அர்பன்ரைசர்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மணிப்பால் அணி விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் இலங்கையின் ஏஞ்சலோ பெரேரா ருத்ர தாண்டவம் ஆடினார்.
மொத்தம் 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார்.
பீட்டர் டிரிகோவின் (Peter Trego) மிரட்டல் பந்துவீச்சில் கடைசி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் மணிப்பால் அணி 16.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அர்பன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஜெரோம் டெய்லர் (Jerome Taylor) மற்றும் பீட்டர் டிரிகோ தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!