சென்னையை குளிர்வித்த கோடை மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (16) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை குளிர்வித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.

தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்துவருகிறது.

இதற்கிடையில், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நேற்றிரவும் கூட கோயம்பேடு, பல்லாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தரமணி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!