7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!