சிவ பெருமான் படத்தை காட்டி ராகுல் பேச்சு!

சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.இராகுல் பேசினார். இதற்கு, சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது தான் அவை விதி என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

ஹிந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளன. லோக்சபாவில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா?. சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல. அகிம்சைக்கானது.

அரசியலமைப்பு சட்டம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாக்குதலில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை காத்து வருகிறோம். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!