240 ரன் விளாசிய ரச்சின் ரவீந்திரா! 162யில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது.

Bay Oval மைதானத்தில் நடந்து வரும் இந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.

ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 26 பவுண்டரிகள் அடங்கும். இது அவரது முதல் சதம் ஆகும்.

அவருக்கு அடுத்த படியாக கேன் வில்லியம்சன் 118 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 39 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரது முதல் டெஸ்ட் ஆகும்.

பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பிராண்ட் (4), வான் டோன்டர் (0) அடுத்தடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

கீகன் பீட்டர்சன் மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சாண்ட்னர், மேட் ஹென்றியின் அசத்தலான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு சுருண்டது. கீகன் பீட்டர்சன் 45 (132) ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 349 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!