புடின் மீண்டும் வெற்றி பெறுவார்! கருத்துக்கணிப்பில் தகவல்!

புதிய ரஷ்ய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று(15) தொடங்கியது.

மேலும், இந்த தேர்தல் இன்று மற்றும் நாளை நடைபெறும்
நிலையில் ரஷ்யா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் நான்கு முறை போட்டி நிலவுவதுடன் அதிபர் புடின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அத்தோடு மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புடினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின் ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!